திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில், விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் கைரேகை பதிவு புதுப்பிப்பு சிறப்பு முகாம் நாளை 08.08.2026(சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்த முகாமில் பங்கேற்று கைரேகை பதிவு புதுப்பிப்பை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

