49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூல்கள் ஆழி பதிப்பகம் (அரங்கு எண் 595–596) மற்றும் காக்கை கூடு (அரங்கு எண் 376–377) ஆகிய அரங்குகளில் வாசகர்களுக்காக கிடைக்கின்றன.
வரலாறு, பண்பாடு மற்றும் மாவட்ட வளர்ச்சியைப் பதிவு செய்யும் இந்த நூல்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
49-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னையின் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது.

