மத்திய அரசின் இந்திய வனப்பணியில் (IFS) தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த மு.வெ. நிலாபாரதி சிறப்பாக தேர்வாகியுள்ளார். அவரது சகோதரி மு.வெ. கவின்மொழி சமீபத்தில் இந்திய காவல் பணியில் (IPS) இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே TNPSC Group 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
அவர்களின் பெற்றோர் கூறுகையில், மருத்துவம் கனவாக இருந்தாலும், NEET காரணமாக வேளாண்மை படித்து, UPSC-க்கு முழுமையாக தயார் செய்ததாலே இந்த வெற்றி சாத்தியமானது என தெரிவித்தனர்.
இருவரின் தாயார் அ.வெண்ணிலா அரசு பள்ளி ஆசிரியையும் எழுத்தாளருமானவர். தந்தை மு. முருகேஷ் ஹைக்கூ கவிஞர் ஆவார். ஒரே நேரத்தில் வந்தவாசியில் இருந்து இரண்டு அதிகாரிகள் உருவானது பெருமைக்குரிய நிகழ்வாகும்.