சந்தன மரத்திற்கு சந்தையில் உள்ள அதிக தேவை, உயர்ந்த விலை மற்றும் நீண்டகால லாப வாய்ப்பு ஆகிய காரணங்களால், சந்தன சாகுபடி தற்போது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது ஒரு கிலோ சந்தனத்தின் சந்தை விலை சுமார் ₹10,000 ஆக உள்ளது. சராசரியாக 18 ஆண்டுகள் வளர்ச்சிக்குப் பிறகு, ஒரு சந்தன மரத்திலிருந்து சுமார் 10 கிலோ சந்தனத்தைப் பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு மரத்திற்கு ₹1 லட்சம் வரை வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது.
நீண்ட கால முதலீடாகவும், அதிக மதிப்பு கொண்ட மரப்பயிராகவும் சந்தன சாகுபடி கருதப்படுவதால், பாரம்பரிய விவசாயத்துடன் இணைத்து இதை மேற்கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சந்தன சாகுபடி தொடர்பான விரிவான தகவல்கள், கள அனுபவங்கள் மற்றும் நடைமுறை விளக்கங்கள் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் !!!

