ஆடி அமாவாசை இன்று (ஜூலை 24). முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இது மிக முக்கியமான நாள்.
அமாவாசை திதி இன்று அதிகாலை 3.06 மணிக்கு துவங்கி, நாளை (ஜூலை 25) அதிகாலை 1.48 மணி வரை நீடிக்கிறது. தர்ப்பணம் செய்யும் போது, ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் தவிர்க்க வேண்டும்.
இன்று:
- எமகண்டம்: காலை 6.00 முதல் 7.30 மணி வரை
- ராகு காலம்: மதியம் 1.30 முதல் 3.00 மணி வரை
தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்
காலை 7.35 மணி முதல் 12.00 மணி வரை தர்ப்பணம் செய்யலாம்.
முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தி, தர்ப்பணம் செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் என நம்பப்படுகிறது.