கலசபாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெ. தனஜெயன் முன்னிலையில் நடைபெற்ற BPN Colloquium 2026 – கர்நாடக துணை முதல்வர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா பாராட்டு!

[post-views]

பெங்களூரு, ஜூலை 26:

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெ. தனஜெயன், பெங்களூருவில் Spectrum Physio Centres நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் Bangalore Physiotherapists Network (BPN)-ன் Founder Secretary ஆக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலும், BPN அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற BPN Colloquium 2026 மாநாட்டில் கர்நாடக மாநில துணை முதல்வர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உடற் சிகிச்சை (Physiotherapy) நிபுணர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் சுகாதாரத் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

உரையாற்றிய துணை முதல்வர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா, உடற் சிகிச்சை என்பது வலி அல்லது காயத்திற்கு பிறகு அளிக்கப்படும் சிகிச்சை மட்டுமல்ல; அது எதிர்கால நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை மருத்துவத்தின் முக்கிய அங்கமாக வளர்ந்து வருகிறது என்று வலியுறுத்தினார்.

தான் ஒரு விளையாட்டு வீரராக இருந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், விளையாட்டு வீரர்களின் காயத் தடுப்பு, விரைவான குணமடைதல் மற்றும் திறன் மேம்பாட்டில் உடற் சிகிச்சை நிபுணர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார். மேலும், கர்நாடக மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உடற் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடத்த முன்மொழிவை வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், உடற் சிகிச்சைத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்குமாறும், கர்நாடகத்தை உடற் சிகிச்சை, மறுவாழ்வு மருத்துவம் மற்றும் விளையாட்டு அறிவியலின் முன்னணி மையமாக உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.

நன்றி தெரிவித்த டாக்டர் ஜெ. தனஜெயன்

மாநாட்டில் கலந்து கொண்டு உடற் சிகிச்சைத் துறைக்கு ஊக்கமளித்த கர்நாடக துணை முதல்வருக்கு, Bangalore Physiotherapists Network (BPN) சார்பில் Founder Secretary டாக்டர் ஜெ. தனஜெயன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

“தங்களின் வருகையும், ஊக்கமளிக்கும் உரையும், உடற் சிகிச்சைத் துறைக்கு வழங்கும் ஆதரவும், இந்த மாநாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான உடற் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்துள்ளது. உடற் சிகிச்சைத் துறையின் வளர்ச்சிக்காக அரசின் தொடர்ந்த ஆதரவை எதிர்நோக்குகிறோம்,” என்று அவர் தனது நன்றி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கலசபாக்கத்திற்கு பெருமை

கலசபாக்கத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் ஜெ. தனஜெயன், பெங்களூருவில் Spectrum Physio Centres மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு தரமான உடற் சிகிச்சை சேவைகளை வழங்கி வருவதுடன், Bangalore Physiotherapists Network (BPN) மூலம் உடற் சிகிச்சை நிபுணர்களை ஒருங்கிணைத்து தொழில்முறை வளர்ச்சிக்கும், சமூக சேவைக்கும் முக்கிய பங்காற்றி வருகிறார்.

அவரது தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான மாநாட்டில் கர்நாடக மாநில துணை முதல்வர் பங்கேற்று, உடற் சிகிச்சைத் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருப்பது கலசபாக்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

Share Article

Edit Template
Copyright © Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.